நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்தப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது படத்தின் வெற்றியை பொருத்து படத்தின் 2-ம் பாகம் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, கோலி சோடா, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வெளியாக உள்ள நிலையில், இந்தியன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன் , சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த நீர்ப்பறவை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில், ரசிகர்கள் இந்த படத்தின் 2-ம் பாகம் வெளியாகுமா என இணையதளத்தில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி நீர்ப்பறவை பாகம் 2 தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.