கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு
கொரோன வைரஸ் பாதிப்பினால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதித்து வருகிறுது. இதுவரை இந்தியாவில் மட்டும் 724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரமாண தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக அவசரமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 3 ஆம் தேதி நடக்கவிருந்த நீட் தேர்வுகள், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதன் காரணமாக பள்ளிகளின் தேர்வுகள் ஒத்திவைத்தது போல் நீர் தேர்வின் தேதிகளும் ஒத்தி வைப்பதாக “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்” தனது அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது
கொரோனா தொற்றினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் கல்வி, வணிகம், வேலை, நிறுவனங்கள், போக்குவரத்து தடை போன்ற அனைத்து தரப்பும் கடுமையான முறையில் பாதித்துள்ளன. நாளுக்கு நாள் கொரோனாவின் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு அதோடு முடியுமா அல்லது கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு தொடருமா? என்ற கேள்வியும் சிலரிடம் எழுந்துள்ளது.