இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘NEET(National eligibility cum entrance test) நுழைவு தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ள படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட பட்டு இருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மேலும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை 07.01.2020 (நாளை )கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.