ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு!  இவ்வாறு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

0
121
NEET exam on 17th July! You can download Halticket like this!
NEET exam on 17th July! You can download Halticket like this!

 

ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு!  இவ்வாறு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல்,வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும்.மொத்தம் 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் எனவும் அதற்கான மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒரு வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு மாணவர் மூன்று முறை இந்த தேர்வினை எழுதலாம் மற்றும் இட ஒதுக்கீடு பெரும் பிற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறை இந்த தேர்வு எழுதலாம் எனவும் விதிமுறைகள் உள்ளது.மேலும் கொரோன பரவல் காரணமாக இந்த நீட் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்விற்கு விண்ணப்ப படிவமானது ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை கலாஅவகாசம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் முக்கியமானது. நீட் தேர்வானது ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. மாணவர்களும் வலைதள பக்கத்தில் நீட் தேர்வு நடைபெறும் பொழுதே பல்வேறு தேர்வுகள் நடக்கிறது என்று பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து தேசிய தேர்வு முகமை மையமானது திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி க்யூட் தேர்வும், ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு, ஜூலை 21ஆம் தேதி ஜிமெயின் தேர்வும் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும் இளநிலை நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில்  நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட் மாணவர்கள் அதிகாரப்பூர்வமான neet.nta.ac.in இணையதளத்தின் முகவரிக்கு சென்று admit card download பக்கத்திற்கு சென்று தேர்வர்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து பிறகு லாகின் செய்து கொள்ளவும்.

அப்போது உங்களது ஹால் டிக்கெட் காண்பிக்கப்படும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கொரோனா பரவல் அதிகம் காணப்படும் நிலையில் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும்  இந்த நீட் தேர்வானது நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.