இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! எப்படி பார்ப்பது..? முழு விவரம்!

Photo of author

By Parthipan K

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் – ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று (அக். 16) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வு முடிவுகளை www.ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது www.nta.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.