மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வருகிற மே 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்வு கூட அனுமதி சீட்டு என அழைக்கப்படும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதை நிரப்ப வேண்டும் எதை நிரப்பக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் பொதுவாக 3 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பக்கத்தில் தேர்வு குறித்த மாணவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும். இரண்டாவது பக்கத்தில் புரஃபார்மா மற்றும் மூன்றாவது பக்கத்தில் நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருக்கும்.
முதலில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை நீட் அட்மிட் கார்டில் ஒட்ட வேண்டும் அதனை தொடர்ந்து இடது கைவிரல் ரேகையும் அதே நேரத்தில் மாணவர்கள் அவர்களுடைய கையெழுத்தை தேர்வு கூடத்தில் மட்டுமே சென்று போட வேண்டும். அதற்கு முன்னதாக கையெழுத்து போடுவது கூடாது.
அட்மிட் கார்டு புகைப்படம் அடையாளச் சான்று ஆதார் அட்டை ஆகியவை நீட் தேர்விற்கு செல்லக்கூடிய பாலவர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் தேவைப்பட்டால் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லலாம் அவற்றைத் தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வரைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.