அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது.இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில்,தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினமாக இருந்ததனால் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த தொங்கும் பாலத்திற்கு, விடுமுறை தினத்தை களிக்கும் வகையில் சென்றுள்ளனர்.
ஆனால் இந்த தொங்கு பாலமானது திடீரென அறுந்து விழுந்ததில் பாலத்தில் இருந்த அனைவரும் ஆற்றிற்குள் மூழ்கினர்.
தற்போது வரை ஆற்றினுள் விழுந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 19 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதம் இருப்பவரை தேடும் பணி விரைந்துள்ளது.
இந்நிலையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததற்கான சில முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது.
ஒரேவா டிரஸ்ட் என்ற தனியார் நிறுவனம் இந்தப் பாலத்தை சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை அரசிடம் இருந்து பெற்றுள்ளது.ஆனால் கடந்த 26 ஆம் தேதி பாலத்தை திறப்பதற்கு அரசிடம் எந்த சான்றும் பெறாமல் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பாலத்தை திறப்பதற்கு முன்பாக ஒப்பந்தத்தை பெற்ற தனியார் நிறுவனம் அரசிடம் பாலம் மக்கள் உபயோகிக்கப்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.ஆனால் அது போன்ற எந்த சான்றிதழையும் வாங்கவில்லை என்று மோர்பி நகராட்சி தலைவர் சந்திப்ஷின்க் ஸலா தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பாலத்தை திறப்பதற்கு முன்பு அந்த நிறுவனம் என்னென்ன புனரமைப்பு வேலைகள் அந்த பாலத்தில் செய்யப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் அரசிடம் அளிக்கவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தில் செல்லும்போது பொதுமக்கள் பலரும் அங்கேயும் இங்கும் குதித்து ஓடியதில் தொங்கும் பாலம் ஊசல் ஆடியது வெளியிட்ட வீடியோவில் காண முடிந்ததாகவும் இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் பாலம் புரைமைப்பு செய்யப்பட்ட சில நாட்களிலே எந்தவித சோதனையுமின்றி ஒரே நாளில் அளவுக்கு அதிகமான மக்கள் அந்த பாலத்தை பார்வையிட்டதன் காரணமாகவும் பாலம் அருந்து விழுந்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எந்தவித சான்றிதழும் இன்றி பாலத்தை திறந்ததற்கு,அந்த தனியார் நிறுவனத்தின் அலட்சியமா? இல்லை அரசின் ஒப்புதல் பெறாமல் பாலத்தை திறந்து பொதுமக்கள் செல்லும் வரை கண்டுகொள்ளாமல் இருந்த அரசின் அலட்சியமா? என்ற கேள்வி பலரது மக்கள் மனதில் எழுந்துள்ளது.