எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்!

0
130
Attention MBBS and BDS students! Submit these 13 documents!
Attention MBBS and BDS students! Submit these 13 documents!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் ,முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ,விளையாட்டுப் பிரிவினர் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 65இடங்களும் ,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565இடங்களும் நிரம்பியுள்ளது.அதனையடுத்து இடஒதுக்கீட்டு ஆணையை பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

மேலும் இணைய வழியில் நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் 5,647எம்பிபிஎஸ் இடங்களும் 1,389 இடங்களும் நிரம்பியுள்ளது.இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பொதுக் கலந்தாய்வில் தற்காலிக இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கவுள்ளது.

தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை ,நீட் தேர்வு அனுமதி அட்டை,நீட் மதிப்பெண் அட்டை,10,11,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாற்றுச் சான்றிதழ் ,இருப்பிடச் சான்றிதழ் ,முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை தகுதி உள்ளவர்கள் மட்டும் சமர்பிக்க வேண்டும்,தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் தகுதி சான்றிதழ் ,ஆதார் அட்டை ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் பத்து, ஆகிய 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு இறுதி இடஒதுக்கீட்டு ஆணை பெறுபவர்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும் முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் நவம்பர் நான்காம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் அப்போது சான்றிதழ்களின் அசல் ,நகல்களை கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K