ஜப்பான் இசைவெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி!!! அப்போ ஏன் லியோவுக்கு அனுமதி தரல!!?
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் கியைப்படத்திற்கு மட்டும் நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கொடுத்திருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு அனுமதி கொடுக்கப்படாதது ரசிகர்களின் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி திரைப்படத்தில் ஜப்பான் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. ஜப்பான் திரைப்படத்தில் அணு இமானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் ஜப்பான் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூரியா மற்றும் பலர் கலந்து கொள்வார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின். ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.