உடலில் இம்யூனிட்டி பவரை தாறுமாறாக அதிகரிக்கும் நெல்லிக்கனி குல்கந்து!! இதை எப்படி செய்ய வேண்டும்?

Photo of author

By Divya

உடலில் இம்யூனிட்டி பவரை தாறுமாறாக அதிகரிக்கும் நெல்லிக்கனி குல்கந்து!! இதை எப்படி செய்ய வேண்டும்?

Divya

Nellikani kulkandu increases immunity power in the body!! How to do this?

பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் நெல்லிக்காய் தீராத நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.அதோடு அஜீரணக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய் குல்கந்து செய்ய தேவைப்படும் பொருட்கள்:

1)மலை நெல்லிக்காய் – 20
2)குண்டு வெல்லம் – கால் கிலோ
3)தேன் – கால் கப்

நெல்லிக்காய் குல்கந்து செய்முறை:

முதலில் 20 அல்லது 25 மலைநெல்லிக்காய் வாங்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து காய்கறி சீவல் கொண்டு சீவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் அடிகனமான பாத்திரம் ஒன்றை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு சீவி வைத்துள்ள பெரிய நெல்லிக்காயை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இதனிடையே மற்றொரு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கப் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் காய்ச்சி வதங்கி கொண்டிருக்கும் நெல்லிக்காயில் சேர்க்க வேண்டும்.

பிறகு ஒரு கரண்டி கொண்டு அதை நன்றாக கிண்டவும்.நெல்லிக்காய் சீவல் நன்றாக சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு இதை ஆறவிட்டு கால் கப் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்து அதில் ஊற்றி ஒருமுறை நன்றாக கிளற வேண்டும்.பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து தயாரித்து வைத்துள்ள நெல்லிக்காய் குல்கந்தை அதில் சேகரிக்க வேண்டும்.

இந்த நெல்லிக்காய் குல்கந்தை பாலில் கலந்து பருகலாம்.அல்லது வெறும் வாயில் சாப்பிடலாம்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.நெல்லிக்காய் சாப்பிடாதவர்களுக்கு இதுபோன்று செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.