புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!!
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி ஜோலேகா மண்டேலா அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக நெல்சன் மண்டேலா அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா நாட்டின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் 1994 முதல் 1999 வரை அதிபராக இருந்தார். இவர் 95வது வயதில் இயற்கை எய்தினார். இந்நிலையில் நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி ஜோலேகா மண்டேலா அவர்கள் கல்லீரல், இடுப்பு, முதுகுத் தண்டு, நுரையீரல், மூளை ஆகியவற்றில் ஏற்பட்ட மெட்டாஸ்டேடிக் என்ற புற்று நாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் ஜோலேகா மண்டேலா அவர்கள் நேற்று(செப்டம்பர்26) மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மறைந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி ஜோலேகா மண்டேலா அவர்கள் உயிரழந்ததை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உறுதி செய்துள்ளது.
ஜோலேகா மண்டேலா அவர்களின் மறைவிற்கு நெல்சன் மண்டேலா அறக்கட்டளை “மண்டேலா அவர்களின் குடும்பத்திற்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. ஜோலேகா மண்டேலா அவர்களின் மறைவிற்கு பொதுமக்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.