இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

0
26
#image_title

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேற்கு திசையில் வீசப்படும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி கன மழை பெய்தது. மேலும் வடமேற்கு பருவ மழை துவங்கும் காலம் வந்து விட்டது. இதையடுத்து சென்னையில் நேற்று(செப்டம்பர்26) பல இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இன்று(செப்டம்பர்27) முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மழை பெய்யத் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று(செப்டம்பர்27) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.