NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!!
இந்த காலத்தில் அனைவருமே ஆண்ட்ராய்டு மொபைலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அனைவருமே மொபைலில் தான் பாதி வாழ்க்கையை கழிக்கிறோம். மொபைலில் நமக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்க மிகவும் உதவுகிற ஒன்றுதான் இன்டர்நெட்.
ஆனால் இந்த இன்டர்நெட் சிறிது நேரம் பயன்படுத்தி விட்டாலே காலி ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டாலே 50 சதவீதம் முடிந்து விடுகிறது பிறகு 90 சதவீதம் 100% என்று குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் உடனடியாக காலியாகி விடுகிறது என்று பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை நம் ஃபோனில் உள்ள செட்டிங்ஸில் சென்று சுலபமாக சரி செய்து விடலாம் அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
நம் மொபைலில் நாம் பயன்படுத்தாத செயலிகளுக்கும் சேர்த்து இன்டர்நெட் செலவாகிறது அதை எவ்வாறு தடுப்பது என்றால், settings யில் apps கிளிக் செய்து அதனுள் app management கிளிக் செய்ய வேண்டும்.
அதில் நம் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து செயலிகளும் வந்துவிடும் அதில் நாம் பயன்படுத்தாத செயலிகளுக்குள் சென்று, அதில் data usage கிளிக் செய்து, backround data ஆப்ஷனை ஆப் செய்து வைத்து விட வேண்டும்.
இதனை அடுத்து நம் மொபைலில் அனைத்து செயலிகளும் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆவதை ஆப் செய்ய வேண்டும். அதற்கு ப்ளே ஸ்டோர் சென்று அதில் நம் ப்ரொபைலை கிளிக் செய்து அதனுள் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். செட்டிங்ஸின் உள்ளே network preference என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.
அதனுள் auto update apps என்பதை கொடுத்து அதில் don’t auto update apps என்பதை தர வேண்டும். இவ்வாறு இந்த இரண்டு முறையையும் செய்து விட்டால் மொபைலில் நாம் எவ்வளவு நேரம் பார்த்தாலும் இன்டர்நெட் மிகவும் குறைவாகவே செலவாகும்.
சில பேர் இன்டர்நெட் நன்றாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏரோபிளேன் மூடை ஆப் செய்து திரும்ப ஆன் செய்வார்கள். அது என்னவென்றால், டவரில் இருந்து நம் மொபைலுக்கு சிக்னல் கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த சிக்னல் எவ்வளவு வீக்காக இருந்தாலும் நம் மொபைலுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இப்போது சிக்னல் வீக்காக இருந்தால் இன்டர்நெட்டும் நமக்கு மிகவும் ஸ்லோவாகவே கிடைக்கும். இவ்வாறு சிக்னல் மிகவும் வீக்காக இருக்கும்போது நாம் ஏரோப்ளேன் மூடை ஆன் செய்து விட்டால் உடனடியாக ஸ்ட்ராங்கான சிக்னல் நம் போனுக்கு கிடைக்கும் சிக்னல் நன்றாக கிடைத்தால் இன்டர்நெட்டும் நமக்கு நன்றாக கிடைக்கும்.
எனவே மொபைல் செட்டிங்ஸில் இந்த முறையை அனைவரும் உடனடியாக செய்து விடுங்கள் இவ்வாறு செய்வதால் நமக்கு இன்டர்நெட் வேகமாகவும் கிடைத்து மிகவும் குறைந்த அளவும் செலவாகும்.