இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!!

0
34

இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!!

நீங்கள் வெளியே செல்லும்போது உங்களிடம் இருக்கும் மொபைல் போனை யாரேனும் எடுத்து விட்டார்கள் என்றாலும் அல்லது நீங்கள் தொலைத்து விட்டீர்கள் என்றாலும் கவலைப்படாதீர்கள் அதனை எளிய முறையில் கண்டுபிடிக்கலாம். இதற்கு நீங்கள் முதலில் பண்ண வேண்டியவை.

1. 94862-14166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் எங்கு எப்போது உங்களுடைய போனை தொலைத்தீர்கள் என்று தகவல்களை அவர்களிடம் கூறினால் போதும் அவர்களே உங்களுடைய மொபைலை கண்டுபிடித்து தந்து விடுவார்கள். மேலும் அந்த விவரங்களுடன் உங்கள் போனின் IMIE நம்பரை கொடுத்தால் போதும் அவர்களே உங்களுடைய போனை விரைவாக கண்டுபிடித்து தருவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.

ஆனால் இந்த திட்டத்தை வேலூரில் உள்ள காவல்துறையினர் மட்டும் கொண்டு வந்துள்ளார்கள் இது மற்றும் மாவட்டங்களுக்கு பொருந்தாது.

அதனை தொடர்ந்து மத்திய அரசு மொபைல் தொலைந்து விட்டது என்றால் அதனை செயலிழக்க செய்ய இணையதள முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் மூலம் உங்கள் மொபைலை பிளாக் செய்ய முடியும்.

மொபைலை பிளாக் செய்வது எப்படி என்பதை KYM IMEI  பண்ணிய பிறகு 14422 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து பிளாக் செய்யலாம்.

மேலும் http://www.ceri.sancharsaathi.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு சென்று திருடு போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.

அந்த வெப்சைட்டிற்கு சென்று மொபைல் பற்றிய விவரங்களை தந்து இப்பொழுது மொபைல் காணாமல் போனது எந்த இடத்தில் தொலைந்தது என்றும் போலீசாரிடம் கம்ப்ளைன்ட் செய்த எஃப்ஐஆர் நம்பர் மற்றும் மொபைலின் ஓனர் யார் போன்ற தகவலை தெரிவித்து நம் மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.

author avatar
Jeevitha