நாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாடு வறுவல்!

Photo of author

By Kowsalya

நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையான பொருட்கள்:

2. நெத்திலிக் கருவாடு100 கிராம்

3. சின்ன வெங்காயம்20

4. தக்காளி1

5. பூண்டு பல்8

6. மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

7. மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்

8. கறிவேப்பிலை1 கொத்து

9. உப்புதேவைக்கேற்ப

10. நல்லெண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

1.  நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.  வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முதலில் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

4.  அடுத்து பூண்டு சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி கருவாடு சேர்த்து வதக்க வேண்டும்.

5. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்க வேண்டும்.

6. ஒன்றிரண்டு முறை திறந்து கிளறி விட்டு மூடி வேக வைக்க வேண்டும். தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.

7. இந்த முறையிலேயே மற்ற வகைக் கருவாடுகளையும் செய்யலாம்.

ருசியான நெத்திலி மீன் கருவாடு வறுவல் உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மகிழுங்கள்