அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் தற்போது சில ட்ரோல்களை சந்தித்து வருகிறார். ஒரு உச்ச நடிகரின் மீது தனது பாசத்தை வெளிப்படுத்தியதால் இவர் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார் என்பது தான் ஹைலைட்.

அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் கிருஷ்ணா, அஜித்தின் துணிவு பட புகைப்படம் ஒன்றினால் ஈர்க்கப்பட்டு அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தனக்கு பிடித்த நடிகர் மீதுள்ள பாசத்தாலும், அவரை பாராட்டும் விதமாகவும் கிருஷ்ணா இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்ட அஜித்தின் புகைப்படம் துணிவு படத்திலுள்ள புகைபபடம் இல்லை, அது அஜித் ரசிகர்களால் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகர் அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்பது கூட தெரியாமல் இந்த படத்தை பகிர்ந்திருப்பதாக கூறி நெட்டிசன்கள் கிருஷ்ணாவை கேலி செய்து வருகின்றனர். ஒரு நடிகரின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை பகிர்வது மட்டும் போதாது, அதன் பின்னணியில் உள்ள உண்மையைச் சரிபார்க்க வேண்டும் என்பது போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment