நேத்து நீங்க இன்னைக்கு நாங்க!!! அயலான் டீசர் இன்று மாலை வெளியாகின்றது!!!

0
240
#image_title

நேத்து நீங்க இன்னைக்கு நாங்க!!! அயலான் டீசர் இன்று மாலை வெளியாகின்றது!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் இன்று(அக்டோபர்6) மாலை வெளியாகவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத்சிங் நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் யோகி பாபு, பாலசரவணன், கருணாகரன், பானுப்பிரியா, ஈஷா கோபிகர், ஷரத் கெல்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அயலான் திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதியை மாற்றி அயலான் திரைப்படம் பொங்களுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதையடுத்து அயலான் திரைப்படத்தின் டீசர் இன்று(அக்டோபர்6) மாலை வெளியாகவுள்ளது.

அதன்படி இன்று(அக்டோபர்6) மாலை 7.08 மணிக்கு சன் தொலைக்காட்சியின் யூடியூப் சேனலில் அயலான் திரைப்படத்தின் தமிழ் டீசர் வெளியாகவுள்ளது. அதே நேரத்திற்கு(7.08) அயலான் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் சோனி மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று(அக்டோபர்5) முழுவதும் லியோ திரைப்படத்தின் டிரெய்லருக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் இன்று(அக்டோபர்6) முழுவதும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படத்தின் டீசருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleஅக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
Next articleஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு.. – மனம் திறந்த பார்த்திபன்!