அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
30
#image_title

அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாளையுடன்(அக்டோபர்7) 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிவடையும் நிலையில் அதற்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பதில் அளித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் செறுவதாகவும் இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி அறிவித்தது. இதையடுத்து மக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

இந்த கால அவகாசம் முடிந்ததை அடுத்து மேலும் கூடுதலாக 7 நாட்கள் அவகாசம் அளித்து அக்டோபர் 7ம் தேதி வரை மாற்றிக் கொள்வதற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்த கால அவகாசம் நாளையுடன் அதாவது அக்டோபர் 7ம் தேதியுடன் முடியும் நிலையில் மக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் கொடுத்து மாற்ற முடியும் என்று கூறி அதற்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் ஆனால் மக்கள் அனைவரும் தங்களது கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மட்டுமே கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளில் நேரடியாக சென்று அல்லது தபால் மூலமாக பணத்தை அனுப்பி தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் அரசு துறைகள் வரம்புகள் எதும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.