விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான்.
ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் அவருடைய குழுவினருடன் சேர்ந்து செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.அந்த செயலியின் மூலம் கொரோனா வைரஸ் போன்ற தொற்று உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த நிறுவனம் ரெஸ்ஆப் என்ற செயலியை உருவாக்கியுள்ளது.இந்த செயலியானது கொரோனவை மட்டுமின்றி ஆஸ்துமா ,நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடிக்க உதவுகின்றது.இரும்பல் ,மூக்கில் நீர் வருதல் ,காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளை கொண்டே ஒருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதா.அந்த தொற்று எந்த அளவிற்கு உள்ளது என இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளாலாம்.
இந்த செயலியானது 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை காட்டுகின்றது என இந்த செயலியை உருவாக்கிய நிறுவனம் கூறுகின்றது.இதனையடுத்து உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர் இந்த செயலியை ரூ 1,474கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பல்வேறு கட்ட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி பெற்ற பிறகு இந்த செல்போன் செயலி பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகின்றது.