ரயில்களில் இனி புதிய பேபி பெர்த் வசதி!! தாய்மார்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!
ரயில்களில் தாய்மார்கள் தங்களின் கைக்குழந்தைகளை தங்கள் இருக்கை அருகிலேயே, வைத்து கொள்ளும், புதிய பேபி பெர்த்தின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி காணலாம்.
முதல் பேபி பெர்த் :-
ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிதாக அவர்களுக்காக தனியாக பேபி பெர்த், அதவாது குழந்தைக்கு என தனியாக படுக்கை வசதி ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் பேபி பெர்த்-தில் நிறைய குறைபாடுகள் இருந்தன். சாதாரண படுக்க வசதி என்பதால் பச்சிளம் குழந்தைகளுக்கு உடம்பில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு உடல் வலியும் ஏற்படும்.
மேலும் பேபி பெர்த்-தில் குழந்தைகளை தாய்மார்கள் படுக்க வைத்தால், குழந்தை கீழே விழவும் வாய்ப்புள்ளது. பேபி பெர்த் பச்சிளம் குழந்தைங்களுக்கு சவுகரியமாக இல்லை என நிறைய தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ரயில்களில் இரவுநேர பயணத்தின்போது படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முன்பதிவு செய்யும்போது குழந்தைகளாக இருந்தால் பாதி கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தனியாக பெர்த் வழங்கப்பட்டது. பாதிக்கட்டணத்தில் பெர்த் வழங்கியதால் ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பேபி பெர்த் குறைபாடுகளை நீக்கும் பணி மீண்டும் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, ஒரு ஆண்டுக்கு பிறகு பேபி பெர்த் மீண்டும் தயாராக உள்ளது. முன்னதாக பேபி பெர்த் சாதாரண இருக்கைகள் போன்று இருந்தது, இதன் காரணமாக குழந்தைக்கு காயம் அல்லது கீழே விழும் அபாயம் இருக்கிறது. ஆனால் இப்போது மேலே இருந்து மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்க்கும் பாலூட்ட முடியும், எந்த வித ஆபத்தும் ஏற்படாது.
பேபி பெர்த் வசதி நிறைய தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவரப்பை பெற்றுள்ளது. தற்போது செய்துள்ள மாற்றங்கள் அனைத்து ரயில்களிலும் வந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவை விட, வட இந்தியர்கள் அதிகமாக தங்கள் போக்குவரத்துக்கு ரயில்களிலே பயணம் செய்கின்றனர். அவர்களுக்கான பல்வேறு வசதிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த பேபி பெர்த் வசதி இன்னும் மேம்படுத்த வேண்டும் என தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.