அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
67

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது.

இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றைய தினம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்பு உள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 16 ஆம் தேதி வரையில் ஓரிரு பகுதியில் பல இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

நாளைய தினம் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இறுதிப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, புதுச்சேரி, கடலூர் மற்றும் அரியலூர், மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

வரும் 16ம் தேதி ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்றும் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.