தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!!
தமிழ்நாட்டு அரசு விரைவு போக்குவரத்து துறை சர்பாக பேருந்துகளுக்கு இனி மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது.மேலும் பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து கழகம் சார்பாக 200 புதிய இருக்கை வசதிகளுடன் இருக்க கூடிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மேம்படுத்த பட உள்ள பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது. மேலும் பயன்பாட்டில் உள்ள நீல நிற பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்ட இருக்கின்றது.
இந்த பேருந்துகள் அனைத்தும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கலவையாக உள்ளது. மேலும் பேருந்துகளில் குறைகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இதனால் சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் பொதுமக்களிடமிருந்தும் சமூக வலைத்தளம் வாயிலாக குறைகள் மற்றும் கருத்துகள் பெற முடிவு செய்துள்ளனர்.
இதன்படி சில மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.அதில் இருக்கைகள் ,ஜன்னல்கள் இவற்றின் தரம் உறுதி செய்ய வேண்டும்,பேருந்துகள் அனைத்தும் சுத்தம் செய்திருக்க வேண்டும், பேருந்துகளின் செல்லும் வேகத்தை அதிகரிக்க வேண்டும், ஏசி பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் ,அதிக எண்ணிக்கையில் படுக்கை உடைய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளனர்.
இது போன்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில் விரைவில் இந்த மாற்றங்கள் அனைத்தும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது.