சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு புதிய கேப்டன்!! ரோஹித் சர்மா இல்லை.. இனி இவர்தான் வெளியான தகவல்!!

0
231
New captain for Champions Trophy series
New captain for Champions Trophy series

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளது அதில் புதிய கேப்டன் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் அடுத்த போட்டிகளில் மீண்டும் அணிக்கு திரும்பிய ரோஹித் வழிநடத்தினார். இதில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அவர் 5வது போட்டியில் விளையாடவில்லை.

இன்று தொடங்கிய 4 வது போட்டியில் இந்திய அணியை ஜஸ்ப்ரித் பும்ரா தலைமை தாங்கினார். முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் முதல் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து 72.2 ஓவரில் 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த 5 வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Previous articleவிஜய் கட்சியால் திமுக வை நாக் அவுட் செய்ய முடியுமா.. பாஜக தான் இதற்கு முக்கிய காரணம்!! வெளியே லீக்கான ஓபிஎஸ் ரஜினி மீட்டிங்!!
Next articleரூ. 270 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது வழக்கு!! சிவாஜி குடும்பத்தில் நிகழும் சொத்து பிரச்சனை!!