சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!!
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் இல்லாததால் மக்கள் பெரும் அளவு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வரும் பட்சத்தில் தற்பொழுது வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மாதம்தோறும் என்னை நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வெளியிடும் பட்சத்தில், இன்றும் விலை நிர்ணய பட்டியலை வெளியிட்டது.
அதில் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டரின் விலையை அதிகரிக்காமல் வணிக சிலிண்டரின் விலையை ரூ.25 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் 19 கிலோ எடையுள்ள வணிக உபயோக சிலிண்டர் ஆனது சென்னையில் இனி 1917 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதுவே டெல்லியில் ரூ.1768 க்கும், மும்பையில் 1721 விற்பனை செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சிலிண்டரின் விலை அதிகரிக்க கூடும் என்று கூறுகின்றனர். இதனின் அடுத்த கட்டமாக அடுத்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா என்று மக்கள் மத்தியில் அச்சம் கிளம்பியுள்ளது.வணிக சிலிண்டர் விலை உயர்வால் கடை உரிமையாளர்கள் பெருமளவு அதிருப்தியில் உள்ளனர்.