நாட்டு மக்களுக்கு சேமிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.வங்கி திட்டங்களான பிக்சட் டெபாசிட்,பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் போன்ற அதிக வட்டி தரும் திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை பெருகுகின்றனர்.
இந்நிலையில் FD டெபாசிட் செய்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்வதற்கான வரம்பை உயர்த்தி இருக்கிறது.
ரூ.2 கோடிக்கு அதிகமாக உள்ள பிக்சட் டெபாசிட்கள் இனி பல்க் டெபாசிட் அதாவது மொத்த டெபாசிட்டாக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சம்பதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வணிக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகபட்ச மொத்த டெபாசிட் வரம்பு ரூ.2 கோடியாக ஆக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.3 கோடியாக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் ரூ.2 கோடிக்கு மேல் உள்ள பிக்சட் டெபாசிட் இனி மொத்த டெபாசிட்டாக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.இந்த மொத்த டெபாசிட்களுக்கு வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன.இது வழக்கமான டெபாசிட்டை காட்டிலும் அதிகமாகும்.
ஆனால் வங்கிகள் பிக்சட் டெபாசிட் வரம்புடன் வட்டி மற்றும் புதிய வரம்பிற்கான வைப்புத் தொகையை மாற்றிக் கொண்டால் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை டெபிசிட் செய்பவர்களை ஒப்பிடுகையில் ரூ.3 கோடிக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.ரிசர்வ் வங்கியின் இந்த பிக்சட் டெபாசிட்கான அதிகபட்ச வரம்பை உய்ரர்த்துவதன் மூலம் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.