பொதுத்தேர்வு தேதியில் புதிய மாற்றம்!! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொது தேர்வானது முதலில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் 13ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைய உள்ளது.
இதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆனது ஜனவரி மாதம் நான்காம் தேதி வெளியாகி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என இன்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது மார்ச் 6ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வைக்கலாம் என ஆலோசனை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் நடப்பு ஆண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் செய்முறை தேர்வானது குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்பே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.