ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான அறிவிப்புகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பயணிகள் தங்களுடைய போர்டிங் ஸ்டேஷனை இலவசமாக மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய அப்டேட் ஆனது செய்யப்பட்டுள்ளது என்றும் IRCTC இல் தற்போது பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே தனது போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளனர். மேலும் இந்த புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள் :-
✓ கூடுதல் கட்டணம் செலுத்தாமல், தேவைப்பட்டால், பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை பலமுறை மாற்றிக்கொள்ள முடியும்.
✓ ரயில் புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் போர்டிங் பாயிண்ட் மாற்றப்பட்டால், டிக்கெட்டைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை பயணிகள் இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
✓ ஐஆர்சிடி இணையதளத்திலேயே பயணிள் இந்த மாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்திய ரயில்வேயின் இந்த முயற்சி, பயணிகள் சேவை மற்றும் திருப்தியை மேம்படுத்துவதற்கான எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது பயணிகளுடைய வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்தியன் ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அமைப்பின் மூலம் டிக்கெட் வழங்கும் செயல்முறையை சீரமைக்கவும் மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-
✓ முதலில் ஐஆர்சிடிசியின் திகாரப்பூர்வ இணையதளமான irctc.co.in ஐப் பார்வையிட வேண்டும்
முகப்புப் பக்கத்தில், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைக
✓ அடுத்த பக்கத்தில், My Account -> My Transactions-> Booked Ticket History ஐ பார்வையிடவும்
✓ இந்தப் பக்கத்தில், நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, ‘Change Boarding Point’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
✓ தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலுடன் புதிய சாளரம் தோன்றும்.
✓ புதிய பக்கத்தில், நிலைய அமைப்பு உறுதிப்படுத்தல் கேட்கும்,உங்கள் டிக்கெட்டின் போர்டிங் புள்ளியை மாற்ற ‘OK’ என்பதைக் கிளிக் செய்யவும்
இதன் மூலம் உங்களுடைய போர்டிங் பாயிண்ட் வெற்றிகரமாக மாற்றப்பட்டு இதற்கான ஸ்ம்ஸ் செய்தியும் உங்களுடைய மொபைலுக்கு வந்து சேர்ந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.