மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம்!! மாநில நிதியமைச்சர் அரசு அதிரடி அறிவிப்பு!!
பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய அரசுகளும் பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் குஜராத் மாநில அரசனது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய ஜோஜனா முக்கிய மந்திரி அமிர்தம் என்ற காப்பீடு திட்டம் மூலம் 10 லட்சம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு 10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த திட்டம் முதலில் 5 லட்சமாக இருந்தது. தற்போது அந்த திட்டம் 10 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனை குஜராத் மாநில நிதியமைச்சர் கனுவாய் தேசாய் அறிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் அந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இதான் மூலம் 10 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அந்த திட்டத்தை மாநிலத்தில் உள்ள 2027 மருத்துவமனை மற்றும் 73தனியார் மருத்துவமனை மற்றும் 18 மத்திய அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாநில மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.