இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!!

0
32
Aadithirugalyanam starts today in Rameswaram!! 16 days of Kolakala festival!!
Aadithirugalyanam starts today in Rameswaram!! 16 days of Kolakala festival!!

இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!!

ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித்திருக்கல்யாணம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும்.

அதனை போன்று அடுத்த மாதம் வர இருக்கின்ற ஆடியில் ராமேஸ்வரத்தில் திருகல்யாணம் நடத்தப்பட உள்ளது. இந்த திருக்கல்யாணமானது  இன்று தொடங்கி 29 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக  கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 16 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு நிகழ்வானது இன்று காலை 10.30  மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெற உள்ளது.இதில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் கொடிமரம் ஏற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் ராமேஸ்வரத்திற்கு  செல்ல இந்த நாள் மிகவும் உகர்ந்த நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்த திருக்கல்யாணத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டும்மலாமல் அனைத்து மாநிலங்களில் உள்ள பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பதால் அதிக கூட்ட நெரிசல் இருக்கும்.

மேலும் இன்று ராமேஸ்வரத்தில்  ஆடி மாதத்தை முன்னிட்டு  திருகல்யாணம் நடத்தவிருப்பதால் அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற  பக்கதர்க்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டிருந்தது.

author avatar
Parthipan K