கரூர் மாவட்டத்தில் இணைய தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்க்கள் வழங்கப்படும் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பொருட்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் உள்ள தொழில்நுட்ப கருவின் இணைய இணைப்பு சரிவர இயங்காத இதன் காரணமாக பொருட்க்கள் விநியோகம் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட ரேஷன் கடை உரிமையாளர்கள், ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையானது நேற்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த நேர மாற்றம் தற்காலிகமான ஒன்று என்றும் சர்வர் பிரச்சனை சரி செய்யப்பட்டால் மீண்டும் வழக்கமான நேரத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று கரூர் மாவட்ட அலுவலர் ஜேஹஸ்ரத் பேகம் கூறியுள்ளார்.