சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

0
174

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமாக அக்டோபர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்ற புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் ஏழாம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கடைசி நாளுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள்  அபராதம் செலுத்தி  விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதையும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. அதாவது நவம்பர் 1ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் மட்டும் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம்   வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நவம்பர் 4ஆம் தேதி  வரை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நவம்பர் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Previous articleரேஷன் கடைகளில் புதிய மாற்றம் !!
Next articleதமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here