டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!! இதில் சுற்றுலா விதிமுறைகளும் அடங்கும்!!

Photo of author

By Gayathri

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் பணம் சம்பந்தப்பட்ட விதிமுறைகளில் மாற்றம் உருவாகும். அந்த வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று தொடங்கப்பட்ட புதிய மாற்றங்கள் பின்வருமாறு :-

✓ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடி செய்பவர்களுக்கு மக்களின் சாதனங்களை அணுகக்கூடிய மற்றும் பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் ஓடிபிக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடியை தடுக்க வணிக செய்திகளுக்கான டிரேஸ்பிலிட்டி ஆணைகளை இன்று முதல் அமல்படுத்துகிறது.

✓ கடந்த மாதம் பெட்ரோலியம் நிறுவனங்கள் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டரின் விலையை 48 ரூபாய் உயர்த்தியது. அதே நேரத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

✓ மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் எக்ஸிட் கட்டணம் 67% முதல் 167 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. எக்கனாமிக் வகுப்பு பயணிகளுக்கு 2532 ரூபாய்யில் இருந்து 4220 ரூபாயாக உயர்கிறது.வணிக வகுப்பு பயணிகளுக்கு 5064 ரூபாயிலிருந்து 10,129 ரூபாய் உயர்கிறது. முதல் வகுப்பு பயணிகள் 20257 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.

✓ யஸ் வங்கி தனது கிரெடிட் கார்டில் விமானங்கள் மற்றும் ஹோட்டலுக்கு ரிவார்டு புள்ளிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் அடிப்படையில் லவுஞ்ச் பெற பயனர்கள் ஒவ்வொரு காலண்டிலும் ஒரு லட்சம் செலவழிக்க வேண்டும். அதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பயனர்களுக்கான வெகுமதி புள்ளி விதிகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தி அமைத்துள்ளது.