புதிய சிம் கார்டு விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். இந்த புதிய விதிகளானது ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் என அனைத்து வகை சிம் கார்டுகளுக்கும் பொருந்தும் என்றும் டெலிகாம் நிறுவனங்கள் டெலி மார்க்கெட்டர்கள் மற்றும் டெலிகாம் கஸ்டமர் கேர் ஆகியோருக்கு இந்த விதிகளானது நேரடியான கட்டுப்பாடுகளை விதிக்க கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பலருக்கு பலவிதமான சேவை குறித்த கால்கள் மற்றும் SCAM கால்கள் என கூறப்படக்கூடிய பல்வேறு விதமான அழைப்புகள் வருவதுண்டு. இதனை தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி டெலிகாம் கஸ்டமர் களுக்கு வரும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் களில் டெல் மார்க்கெட்டிங் அல்லது வணிக ரீதியாக கால்கள் வரக்கூடிய சூழ்நிலையில், கட்டாயமாக 10 டிஜிட் நம்பருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அதனை தொடர்ந்து ப்ரோமோஷன் கால்களுக்கு 140 என்ற சீரிஸ் மற்றும் ட்ரான்செக்ஷன் & சர்விஸ் போன்ற கால்களுக்கு 1600 என்ற சீரிஸ் ஒதுக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கால்களுக்கு மட்டுமல்லாத எஸ் எம் எஸ் களுக்கும் P S T மற்றும் G என்பது போன்ற எழுத்துக்களை தலைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி P என்ற எழுத்து பிரமோஷன் எஸ் எம் எஸ் க்களை குறிப்பதாகவும், S என்ற எழுத்து சர்விஸ் குறித்த எஸ் எம் எஸ் களை குறிப்பதாகவும், T என்ற எழுத்து டிரான்ஸாக்ஷன் எஸ் எம் எஸ் களை குறிப்பதாகவும், G என்ற எழுத்து அரசு சார்ந்த எஸ் எம் எஸ் களை குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பயனர்களுக்கு வரக்கூடிய அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் யாரிடமிருந்து வருகிறது என்பதை எளிதாக கண்டறிந்து கொள்ளும் வகையில் இதை உருவாக்கப்பட்டதாகவும் ஒரு வேலை இந்த விதிகளுக்கு உட்படாமல் அழைப்புகளோ அல்லது எஸ்எம்எஸ்களோ வரும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் பயனர்கள் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.