மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

0
302
new-deadly-virus-spreading-again-people-are-panicking
new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதங்களில் சீனா, ஜப்பான் போன்ற உலக நாடுகளில் உருமாறிய கொரோனா மீண்டும் படையெடுக்க தொடங்கி ஆயிரகணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. இந்த வைரஸ் தாக்குதல் அனைத்தும் ஓரளவுக்கு குறைந்து வரும் நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் கொடிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது.

அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் எனும் கொடிய வைரஸ் பரவி வருகின்றது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் அறிகுறிகள் தீவிர காய்ச்சல்,கடுமையான தலைவலி மற்றும் உடல் சோர்வு போன்றவை தான் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸினால் பாதித்த நோயாளி பலருக்கும் ஏழு நாட்கள் கடுமையான ரத்த கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தது என  உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Previous articleசொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!
Next articleஅதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!