சென்னை: தற்போது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு சார்- பதிவாளர் அலுவலகம் வழக்கம் போல திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செய்யப்பட்டு வந்தது. இதில் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திமுக அரசு விடுமுறை நாளன சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்து இருந்தது.
அதன்படி சார்-பதிவாளர் அலுவலகம் பணியாளர்கள் இதற்க்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த வேலை நாட்களில் பலர் தாங்கள் விடுமுறை எடுத்து பத்திரப்பதிவு செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது என தெரிவித்தனர். அதற்க்கு மாற்றுவழியாக ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதற்க்கு வேலை நாட்களில் தவிர விடுமுறை தினங்களில் ரூ.1000 கூடுதலாக செலுத்த வேண்டும் என சார்-பதிவாளர் அலுவலர் துறையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 582 சார்-பதிவாளர் அலுவலகம் அடங்கும். இந்த திட்டம் ஞாயிற்றுக்கிழமை எந்த துறை மூலம் தொடங்கப்படும் என விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.