True caller-ன் புதிய அம்சம்!! இனி பயனாளர்களுக்கு பதிலாக AI பேசும்!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,பாடல் கேட்பதற்கு ,படிப்தற்கு ,வேலை செய்வதற்கு என்று அனைத்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத அழைப்புகள் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு true caller என்ற செயலி அறிப்முகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தேவையில்லாத அழைப்புக்களை தவிர்க்க முடியும் என்பதே இவற்றின் சிறப்பு அம்சம். எனவே பயனாளர்கள் அனைவரும் இந்த செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியை பதிவிறக்கம் செயிதவுடன் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்களால் ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க முடியும். இது மட்டுமலாமல் 14 நாட்களுக்கு இலவச சேவையையும் இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது.
மேலும் இந்திய பயனாளர்களுக்கு இந்த சேவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் பொழுது அசிஸ்டன்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த மூலம் உங்களால் அழைப்புகளை ஏற்க முடியாத பொழுது இந்த AL Assistant ஆப்சன் தானாகவே பதில் அளித்து விடும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.