ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் மொபைல் உரிமையாளரின் தரவுகளை பாதுகாக்க இது பெரிதும் உதவும். இதன் மூலம் ஃபைண்ட் மை டிவைஸை அன்லாக் செய்யவும் இயலாது என வாடிக்கையாளர்களின் சிரமங்களை புரிந்து அட்டகாசமான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களின் கடவுச்சொல்லை கண்டறிந்தாலும், திருடர்களால் உரிமையாளர்களின் தகவல்களைப் பெற இயலாது. இந்த வசதியானது தற்சமயம் ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்கும் சாம்சங், பிக்லஸ் போன்ற ஸ்மார்ட் போனில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பயோமெட்ரிக் முறையை ஸ்மார்ட் போன்களின் உரிமையாளர்கள் முடித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் போட்டோ,மாஸ்க், போலியான கைரேகைகளை கொண்டு திருடிய ஸ்மார்ட்போனை இயக்க இயலாது. எனினும், மூன்றாம் கட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வசதி பெற முடியும் என்பது ஒரு சரிவே. எவ்வளவு நபர்களால் இந்த உயர்ரக ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும் என்று ஒரு அபாயமும் உள்ளது.