RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

Photo of author

By CineDesk

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

CineDesk

New Head Coach of RCB!! Next IPL Cup Bengaluru team??

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக விராட் கோலியின் தலைமையில் வலம் வரும் ஒரு அணிதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு”. இந்த அணியின் கேப்டனாக பிளசிஸ், மற்றும் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் கடந்த 2019  ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி  பெற்றது.

இருப்பினும் ஒருமுறை கூட ஐபிஎல் லில் பெங்களூரு அணி கோப்பையை அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை எற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசனின் ஒப்பந்தம் இம்மாதம் முடிய இருப்பதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் கூறி உள்ளது.

எனவே, புதிய பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வந்துள்ளது. மேலும், இவரை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு பெங்களூரு அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

இது வரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை அடிக்க முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணிக்கு இவரின் வருகை ஒரு லக்காக இருக்குமா என்று அனைவரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும் என்று பெங்களூரு அணியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.