அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!!

0
302
New information about providing Rs.1000 per month to girl students studying in government aided schools!!
New information about providing Rs.1000 per month to girl students studying in government aided schools!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!!

மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவி தேவை என்ற பெயரில் அனைத்து பெண்களும் உயர்கல்வி பெறுவதற்காக திமுக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே புதுமை பெண் திட்டமான மாணவிகளின் கல்லூரி படிப்பை தொடர்வதற்க மாதம் 1000 வழங்கும் திட்டம் அமலில் இருக்கும் நிலையில் தற்பொழுது விரிவுப்படுத்து அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் 1000 வழங்கும் நீட்டிப்பை  அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.

சமீபத்தில் வெளியான நிதிநிலை அறிக்கையில் இதற்கான தொகையை ஒதுக்கியுள்ள நிலையில்,இந்த விரிவுப்படுத்தப்பட்ட திட்டத்திற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து எந்த ஒரு புதிய அறிவிப்பு மற்றும் திட்டத்தையும் அரசு தேர்தல் சமயத்தில் அமல்படுத்த கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டத்தில் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous articleஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!!
Next articleஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!