அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

Photo of author

By Parthipan K

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

Parthipan K

new-information-published-by-the-government-staff-selection-board-employment-opportunity-for-youth

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையம் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் 20,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பெரும்பாலான பி  பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கம்பைன்டு கிரேச்வேட் லெவல் எக்ஸ்சமிநேசன் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் மத்திய அரசின் தலைமைச் செயலகம் மத்திய புலனாய்வுத் துறை,ரயில்வே துறை ,வெளியுறவுத்துறை ,பாதுகாப்புத் துறை ,தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கு ஆய்வாளர் பணியிடங்கள் மத்திய அரசின் வருவாய் துறைகள் மற்றும் உதவியாளர் ,கண்காணிப்பாளர் பணியிடங்கள் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதனையடுத்து சி பிரிவு பணிகள் 12 ஆம் வகுப்பு முடித்த 18 முதல்  27 வயதிற்உட்பட்ட இளைஞர்கள் சிஹச்எஸ்எல் தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.