தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் பிணையில் விடுதலை செய்ய அனுமதிக்காது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
நெருங்கிய உறவினர்கள் அல்லது அதிகாரம் மிக்கவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு கண்டிப்பாக ஒடுக்கி, தேவையான உரிய தண்டனைகளை வழங்கும் என்று தெரிவித்தார்.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.
இந்த திருத்தங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும்.