இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

இந்த ஊடகங்களுக்கு புதிய சட்டம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்.இதனை தொடர்ந்து மத்திய தகவல்  மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது.

முந்தைய கால கட்டத்தில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது ஆனால் தற்போது எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.அதனால் நாட்டில் எந்த ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் செயல்களும் உடனுக்குடன் அனைவரையும் வந்தடைகின்றது.

மேலும் இவ்வாறான ஊடகங்கள் மூலம் பலரும் பிரபலம் அடைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றது.அதே நேரத்தில் பல்வேறு விதமான சவால்களையும் வழங்குகின்றது.அதனையடுத்து டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் உங்கள் வேலையை எளிமையாக்க சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

தற்போது இது தொடர்பாக மசோதா அறிமுகப்படுத்த அரசு பல்வேறு பணிகளையும் ,முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.செய்தித்தாள்களை பதிவு செய்யும் அம்சத்தையும் எளிமையாக்குவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்படுகின்றது.1967 ஆம் ஆண்டு பத்திரிக்கை மற்றும் நூல்கள் சட்டத்திற்கு பதிலாக விரைவில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.