அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! 

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா மேரி.இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் என்னுடைய கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இதயப்பிரிவில்  உரிய மருத்துவர்கள் இல்லை அதனால் காலையில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இல்லையெனிகள் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாருங்கள் என கூறினார்கள்.அரசு மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் உரிய மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை.

தென் மாவட்ட மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையை தான் நம்பியுள்ளனர்.அதனால் மதுரை ,திருச்சி ,தஞ்சை ,நெல்லை ,ராமநாதபுரம் மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் 4 டி எக்கோ கார்டியோகிராபி எடுக்கும் வசதியையும்.24 மணி நேரமும் இதய அறுவை சிகிச்சை செய்யும் வசதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டடிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ,ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த மனுவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ,மருத்துவ கல்வி இயக்குநர் ,மதுரை டீன் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளி வைத்தனர்.