இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!!
பாஜக- வை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் அனைத்தும் கூடி இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது.இதில் தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் எனத் தொடங்கி கிட்டத்தட்ட 28 கட்சிகள் இதில் அடங்கும். ஆனால் தற்பொழுது வரை இதற்கான பிரதமர் யாரென்று இன்றளவும் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டமும் அதன் ஆலோசனையும் மட்டும் தான் நடைப்பெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு முறை கூட்டத்தின் போதும் ஏதோவொரு முரண்பட்ட மற்ற கட்சி கருத்துக்காக சில தலைவர்கள் வெளியேறுவதையும் பார்க்கிறோம்.
அந்த வரிசையில் பீகார் முதல்வர் நிதீஷ் இந்தியா கூட்டணி எதையுமே செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது மேற்கு வங்க முதல்வர் மம்தா-வும் உள்ளார் என்றே கூறலாம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அதில் கலந்துக்கொள்ள மம்தா-விற்கு எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து ஓர் சில பரப்புரையில் மம்தா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் வெளிப்பாடு தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் மம்தா திரிணா-வுடன் கூட்டணி வைக்கவில்லை. மேற்கொண்டு தற்பொழுது ஜூன் 1 ஆம் தேதி அனைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துக்கொள்ளும் நோக்கில் ஆனால் மம்தா மட்டும் வரவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்பொழுது மேற்குவங்கத்தில் புயல் ஏற்பட்டு எண்ணற்ற சேதங்கள் உருவாகியது. அதன் நிவாரண பணிகளை கவனிக்கப்போவதாகவும், சில இடங்களில் தேர்தல் நடப்பதால் வரவில்லை என்று காரணம் காட்டியுள்ளார்.
ஆனால் அரசியல் சுற்று வட்டாரங்களில் மம்தா, தனக்கு ஆதாயம் உள்ள பக்கம் போவ நினைப்பதாகவும் அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்தியா கூட்டணியில் மற்றொரு தலைவர் விலகவுள்ளது என்பது இதன் மூலம் அப்பட்டமாக தெரியவந்துள்ளது.