புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! தமிழகத்தை நெருங்கும் புயல்!!

0
434
NEW LOW PRESSURE ZONE!! Storm approaching Tamil Nadu!!
NEW LOW PRESSURE ZONE!! Storm approaching Tamil Nadu!!

வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதே போன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நவம்பர் 6ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 7ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் :-

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 8 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :-

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஒரிரு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்)உருவாகும் வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகுடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சமாக இருந்தால் மாணவருக்கு மாதம் 25,000 வழங்க தமிழக அரசு முடிவு!!
Next article42 வயதில் முதல்  IPL போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து ஜாம்பவான்!! பென் ஸ்டோக்ஸ் விலகல் !!