சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது 450 ரூபாய் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடியில் 650 ரூபாய் பெறப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், இதற்கான தீர்வு கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான சில மாறுபாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர், சுங்கச்சாவடி கட்டணங்களால் தான் புதிய சாலைகள் போடுவது மற்றும் சாலைகளை மேம்படுத்துவது பராமரிப்பது போன்று வேலைபாடுகள் நடைபெற்று வருவதாகவும் சுங்கச்சாவடிகளை நீக்கவும் குறைக்கவும் அல்லது அகற்றவோ முடியாது என பதில் வழங்கியிருக்கிறார் அதற்கு மாறாக சுங்கச்சாவடிகளில் ஏமாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் அந்த மாற்றம் தற்பொழுது உள்ள சுங்கச்சாவடி வழிமுறைகளை முற்றிலும் ஆக மாற்றக்கூடிய ஒன்றாக அமையும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுங்கச்சாவடிகள் குறித்து வெளியிடப்பட்ட 3 முக்கிய அறிவிப்புகள் :-
✓ 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் அட்டையை நீக்க வேண்டும்
✓ 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் அட்டையில் KYC சீக்கிரமாக முடிக்கப்பட வேண்டும்
✓ வாகனத்தின் உடைய பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லை என்றால் இரட்டை அபராதம் விதிக்கப்படும்.
அதிலும் இவற்றை தொடர்ந்து கூடிய விரைவில் ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ் இல் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரீசார்ஜ் முடிந்தவுடன் தானாகவே வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்து இ ரிச்சார்ஜ் செய்து கொள்ளும்படியாக பாஸ்ட் டேக் கார்டுகளில் அப்டேட் செய்யப்படும் என்றும் வாகன ஓட்டிகள் இனி எந்தவித கவலையும் இன்றி சுங்கச்சாவடிகளை கூடுதல் கட்டணம் இல்லாமல் அடக்க முடியும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்டேரி தெரிவித்துள்ளார்.