பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

Photo of author

By Divya

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும்.

இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான்.

எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை அமாவாசை நாள் அன்று காலை, மதியம் என்று எந்த நேரத்திலும் செய்யலாம்.

பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்…

*சிவப்பு நிறத் துணி
*மிளகு

ஒரு சிவப்பு நிறத் துணியில் 5 மிளகை போட்டு மூட்டை கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.

அடுத்த அமாவாசை வந்த பின்னர் அந்த மூட்டையில் உள்ள மிளகை மட்டும் நீக்கி விட்டு அதே சிவப்பு துணியில் 5 மிளகு போட்டு கட்டி மீண்டும் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் பண வரவு அதிகரித் தொடங்கும்.