TRAI யின் புதிய அறிவிப்பு!! வெகு நாட்களாக மக்கள் எதிர்பார்த்தது!!

Photo of author

By Gayathri

சில நாட்களுக்கு முன்பாக தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,ஜியோ மற்றும் வோடஃபோன் ஆகியவை தனது ரீசார்ஜ் திட்டத்திற்கான விலையை உயர்த்தியுள்ளன. பெரும்பாலானோர் தனது ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றன மற்றும் சிலர் பேசுவதற்காக மட்டுமே (இன்கமிங்) சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ட்ராயின் ரூல்ஸின் படி சிம் ஆக்டிவாக இருக்க கண்டிப்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

எனவே, இந்த விலை உயர்வானது பயனர்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டாக்கி இருந்தது. இதன் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தும் சிம்களின் ரீசார்ஜ் திட்டத்தை வெளியிடுமாறு ட்ராய் உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில் இதனை சரி செய்யும் வகையில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய ரூல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, செல்போனில் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் எளிமையான திட்டத்தை வெளியிட்டுள்ளது. சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களுக்கான காலவரம்பு (சிம் டிஆக்டிவேஷன் காலவரம்பு) 90 நாட்களாக இருந்த நிலையில், தற்சமயம் அதனை 365 நாட்களாக மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்சமயம் வெறும் ₹20-க்கு ரீசார்ஜ் செய்தால் சிம் கார்டுகளை 120 நாட்கள் வரை டிஆக்டிவேட் ஆகாமல் காத்துக் கொள்ளலாம் எனவும் அதிரடி திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால் டேட்டா பயன்படுத்தாத சிம்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது அமையும். இவ்வாறு ட்ராய் வெளியிட்டுள்ளது.