பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் 2000 முதல் வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற முறை பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைப்பதற்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் கொடுத்துவிட்டு எந்த பணமும் வழங்கவில்லை.
இம்முறையும் அதேபோல் திமுக செய்து விடுமோ என்று எண்ணி பலர் குழம்பி இருந்த நிலையில் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் ஏதும் இல்லை என தெரிவித்து சர்க்கரை, அரிசி, ஆயிரம் ரூபாய் பணம் மட்டும் வழங்குமாறு முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதற்கு அடுத்தபடியாக பல கட்சியினர் கரும்பு வழங்காததனால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் பொங்கல் பரிசு உடன் கரும்பு வழங்கப்படும் என்று கூறினார்.
தற்பொழுது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற இருக்கிறது என்று மக்கள் சொல்லக்கூடாத அளவிற்கு பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அந்த வகையில் வரும் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பச்சரிசி மட்டும் வழங்க வேண்டும் என்றும் பழைய பச்சரிசி ஏதும் வழங்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பழைய அரிசியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள புதிய அரிசிக்கு வண்டு பூச்சி போன்றவை பரவ அதிக வாய்ப்புள்ளதால் கொடுக்கப்பட்டுள்ள புதிய அரிசியை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதேபோல இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சர்க்கரை, மாவு போன்ற சர்க்கரை மக்களுக்கு வழங்க கூடாது என்னவும் தரமுள்ள சர்க்கரை மட்டும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நபருக்கும் சோவையுடன் 10 அடி அல்லது அதற்கு மேல் உள்ள கரும்புகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நியாயவிலை கடைக்கு யாரேனும் கர்ப்பிணி பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் வந்தால் அவர்களை காக்க வைக்காமல் உடனடியாக அவர்களுக்கு பொருள்கள் வழங்குமாறு கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரம் ரொக்க பணத்தை சில்லறையாக மாற்றி தரக்கூடாது என்றும் இரண்டு 500 ரூபாய் தாள்கள் ஆகவே தரவேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
இத்துடன் யாரேனும் டோக்கன் தேதி முடிவடைந்து வந்தாலும் அவர்களை திருப்பி அனுப்பாமல் உடனடியாக பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் எனக் கூறி அனைத்து மக்களுக்கும் ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொருட்களை கொடுத்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.