ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது புதிய ஓய்வூதிய திட்டம்!! மகிழ்ச்சியில் மக்கள்!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சில நாட்கள் முன்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தொழில் துறை, மகளிர் உரிமை தொகை மற்றும் சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வந்திருந்தது.
இதொடங்கியதுந்த கூட்டம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள். மேலும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை ரீதியான அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
அதனையடுத்து இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று தமிழக் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்தியா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்களுக்கான ஓய்வூதிய திட்டம் ,50 வயதிற்கு மேல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்களுக்கான ஓய்வூதிய மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது 1200 ரூபாய் உயர்த்தி உள்ளது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்கபடும். மேலும் இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக ராசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல முதியோர்கள் பயன்பெறுவார்கள்.

